பயங்கரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல்! பரபரப்பில் சென்னை விமானநிலையம்.!

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ந் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது.

இந்த தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.மேலும் இதனை தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்த விதிகளைமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனால் இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் , தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கும் இன்று ரெட் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் இன்று முதல் 7 அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு விமான நிலையத்தில் பாா்வையாளா்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.