தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மார்க் கடைகள் மூலமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியின் பொது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தி படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி ஆட்சி பொறுப்பேற்றபின் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், மதுக்கடைகள் இயங்கும் நேரத்தையும் தமிழக அரசு குறைத்துள்ளது. அதாவது பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தற்போதைய முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் 500 மதுக்கடைகளை மூடியுள்ளார்.
மேலும், பாமக சட்டப்போராட்டம் நடத்தி நாடு முழுவதும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுக்கடைகளை இழுத்து மூடியது. இதில் தமிழகத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது தமிழகத்தில் 4,565 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு, மது கடை சம்பந்தமாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. அதில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படும் நேரத்தை மதியம் 2 மணி ஆக ஏன் குறைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியது.
மேலும், தமிழகத்தில் எவ்வளவு மதுக்கடைகள் மூடப்பட்டாலும், விற்பனையின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றும் கேள்வி எழுப்பியது. இது குறித்து தமிழக அரசு தரப்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
இதன் உருப்படியாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய ஆலோசனைப்படி டாஸ்மாக் கடைகளை மதியம் 2 மணிக்கு திறக்கலாம் என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பு வரும் தேர்தலுக்கு முன்பே செயல்படுத்துவதா? அல்லது தேர்தலுக்கு பின்பு செயல்படுத்த உள்ளதா? என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.