மகன் கண்முன்னே மாயமான தாயார்!

ஐஸ்லாந்தில் உள்ள டயமண்ட் கடற்கரையில் பனிப்பாறை மீது நின்று ஒய்யாரமாக போஸ் கொடுத்த தாயார் கடல் அலையில் சிக்கி மாயமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்லாந்தின் Jökulsárlón பகுதியில் அமைந்துள்ள டயமண்ட் கடற்கரை உலக சுற்றுலாபயணிகளுக்கு எப்போதுமே விருந்தளிப்பவை.

இதனாலையே ஆண்டுதோறும் பல ஆயிரம் சுற்றுலாபயணிகள் குறித்த கடற்கரைக்கு சுற்றுலா செல்கின்றனர்.

இங்குள்ள கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 77 வயது ஜூடித் ஸ்ட்ரெங் தமது குடும்பத்தாருடன் இங்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கொட்டிக்கிடக்கும் பனிப்பாறைகளின் மீது நின்றுகொண்டு பலரும் புகைப்படம் எடுப்பதை கண்ட ஜூடித், தமது மகனிடம் அந்த ஆசையை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஒரு பனிப்பாறை மீது ராணி போன்று ஒய்யாரமாக அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆனால் திடீரென்று கடல் அலை ஒன்று பொங்கி வந்து ஜூடித்தை அள்ளிச்சென்றுள்ளது.

அவரது மகன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அப்பகுதி மக்கள் சுதாரித்துக் கொண்டு காப்பாற்ற களமிறங்கும் முன்னரே அவர் அலையில் தத்தளித்தவாறே சில தூரம் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதியில் படகில் வந்த சிலர் உடனடியாக கடலில் குதித்து ஜூடித்தை காப்பாற்றியுள்ளனர்.

குறித்த தகவலை ஜூடித்தே தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இச்சம்பவத்திற்கு பின்னர் ஐஸ்லாந்து அரசு டயமண்ட் கடற்கரையில் புகைப்படம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.