அர்ஜென்டினா நாட்டில் வடக்கு அர்ஜென்டினா பகுதியில் இருக்கும் டுகுமன் நகரில் மருத்துவமனை வைத்திருப்பவர் செலினா அவுட்ஸ்ட். மருத்துவரான இவரிடம் கடந்த ஜனவரி மாதத்தில் 29 ம் தேதியன்று., 11 வயதுடைய சிறுமியை அழைத்து கொண்டு தாயார் ஒருவர் வந்திருந்தார்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி., 19 வார கர்ப்பிணியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிறுமியிடம் மருத்துவர் விசாரணை மேற்கொண்டார். மேலும்., சிறுமியின் பெற்றோர் அவருடைய கருவை உடனடியாக கலைத்துவிட கூறியுள்ளனர்.
இதனையடுத்து இந்த தகவலை மருத்துவர் அங்குள்ள சுகாதார துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விஷயத்தை கேட்டறிந்தனர்.
பின்னர் சிறுமியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்த போது., எந்த விஷயத்தையும் அறியாத சிறுமி., அவரது தாத்தாவால் சீரழிக்கப்பட்டு கருவுற்றது தெரியவந்தது. மேலும்., எதையும் அறியாத சிறுமி பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமிக்கு அதிகளவு இரத்த அழுத்தம் மற்றும் உடல் நிலையின் காரணமாக கருவை கலைக்க இயலாது என்பதால்., அறுவை சிகிச்சை மூலமாக சிறுமியின் குழந்தையை வெளியே எடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்., சிகிச்சை தொடங்குவதற்கு முன்னதாக சிறுமி அவரது உள்ளாடையை கழற்ற மறுத்ததாகவும்., தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர் இது போன்று நடந்து கொள்ளலாம் என்றும்., சிறுமியின் எதிர்காலம் கருதி அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.
இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.