பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அதிமுக கட்சி மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றது.
பாமகவுக்கு 7 தொகுதிகளையும், பாஜகவிற்கு 5 தொகுதிகளையும் பிற கட்சிகளுக்கு ஒரு தொகுதியையும் வழங்கியுள்ளது. அனால், தேமுதிக மட்டும் இன்னும் பேச்சுவார்த்தையில் சமரசம் இல்லாமல் இருக்கின்றது.
இதனால், அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி இழுபறியில் உள்ளது. தேமுதிக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், புயூஷ் கோயல் அதிமுகவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டார்.
தேமுதிக சார்பில், ” பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக 1 தொகுதி ஒதுக்கி தந்தால் கூட்டணியில் சேருவோம்” என நிபந்தனை வைக்கப்பட்டது. பின்னர், விஜயகாந்த், ” 5 எம்.பி. தொகுதி, 1 மேல்சபை எம்.பி. சரி தான். ஆனால், இடைத்தேர்தலில் 21 தொகுதிகளில் தேமுதிக நிற்கும் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதற்கு அதிமுக சார்பில், ” அதிமுக பெரிய கட்சி பாஜக பேச கூறியதால் தான். இவ்வளவு இறங்கி போய் பேசி வருகிறோம். ஆனால், இப்படி முறைகேடான நிபந்தகனைகளை விதிப்பது சரியல்ல” என பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.