சிவலிங்கத்திற்கும், சிஸ்டத்தின் பவர் பட்டனுக்கும் உள்ள தொடர்பு!

சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர்.

இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.

பவர் பட்டன்: ஒரு குறிப்பிட்ட சாதனத்தை செயல்படுத்த மற்றும் செயலிழக்கச் செய்ய பயன்படும் இயக்க பொத்தானாக இருக்கிறது. பழைய கால மற்றும் சில சுவர் பொத்தான்களில் 1 மற்றும் ௦ என குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதாவது, தொலைக்காட்சியோ அல்லது லைட் மற்றும் பேன் போன்ற சாதனங்களில் ௦ என்பது இயக்கமற்ற நிலையையும், 1 என்பது இயக்க நிலையையும் குறிக்கும்.

மேலோட்டமாக நாம் பவர் பொத்தானை பார்க்கும் பொழுது அப்படி தான் தோன்றும். ஆனால், சிவலிங்கத்துடன் இதன் வடிவத்தை ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு பல அற்புத விஷயங்கள் புலப்படும்.

சிவலிங்கம் மற்றும் பவர் பட்டன் இரண்டும் ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டுள்ளது. அதே போல் ஒரு பொத்தான் தொடக்கமாகவும், முடிவாகவும் உள்ளது. தொடக்கமும் சிவனே, முடிவும் சிவனே என்பதை உணர்த்தவே இந்த பொத்தான் இப்படி வடிவமைக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.