பணதகராறில் மாமியார் மண்டையை பிளந்த மருமகன்!!

சூலூர் அருகே உள்ள புதூரை சேர்ந்த மரியதாஸ் மற்றும் மனைவி ஆசீர்வாதம் இவர்களுக்கு அமலாராணி என்ற மகள் இருந்துள்ளார். அவருக்கும் திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது

இவரது கணவர் பெயர் சிவகுமார் தனது தொழில் தேவைக்காக அமலா ராணியிடமிருந்து, 8 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் சிவகுமார் 10 மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார்.

பின்னர், அமலாராணி கணவரின் உறவினர் ராஜேந்திரன் என்பவரை மறுமணம் புரிந்தார். சிவகுமாரின் கடனை அடைக்கும் பொருட்டு ராஜேந்திரனிடம் ஒரு லட்சம் கடன் வாங்கியிருக்கிறார்.

இந்நிலையில் ராஜேந்திரன் அமல ராணியிடமிருந்து பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறை சரி செய்வதற்கு அமலா ராணியின் தாய் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்பு, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் அவரது பெற்றோர்களை தாக்கியுள்ளார். கணவரை பார்க்க சென்றதால் ஆசீர்வாதம் ஓடிச்சென்று தடுத்துள்ளார்.

இதனால் அவரை கல்லால் தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால், ஆசீர்வாதத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.