சின்னத்திரை நடிகைகள் உட்பட 17 பேர் இலங்கையில் கைது!

சின்னத்திரை நடிகைகள் உட்பட 17 பேர் போதைப்பொருட்களுடன் மாத்தறை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை, பொல்ஹேனவிலுள்ள களியாட்ட விடுதியொன்றில் வைத்தே குறித்த 17 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து கொக்கெய்ன் போதைப்பொருள் மற்றும் போதைமாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சின்னத்திரை நடிகைகள் 3 பேர் அடங்குவதாகவும் ஏனையவர்கள் ஆண்களெனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.