பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் சீரியலுக்கு தமிழ் ரசிகர்கள் பலர் அடிமையாகியுள்ளனர். பள்ளி மாணவர்கள் முதல் வயது முதியவர் வரை சீரியலுக்கு அடிமையாகியுள்ளனர்.
சமீபத்தில் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி எனும் சீரியல் தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. அந்த தொடர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் ஒளிபரப்பாகி வந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நந்தினி சீரியல் கடந்த டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தந்து.
நந்தினி சீரியலை பிரபல இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார். அதில் ஹீரோயினாக நடித்த நித்ய ராமிற்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இந்நிலையில் நந்தினி சீரியலின் இரண்டாம் பாகம், தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் மட்டும் ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழக மக்களும் நந்தினி சீரியலின் இரண்டாம் பாகம் தமிழில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்த்துவந்த நிலையில், தமிழில் ஒளிபரப்பப்படாததால் தமிழக ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.