இல்லறத்தில் நல்லறம் ஏற்படுத்துகள்.!

உங்களின் மனைவியுடன் எந்த விஷயத்திலும் அன்பாகவும்., பிரியமாகவும் இருங்கள்.

உங்களின் மனைவி மனதை புண்படுத்தும் வகையில் ஏதும் பேசாதீர்கள்.

உங்களின் மனைவி மீது தேவையற்ற விசயத்திற்கு கோபமடையாதீர்கள்.

உங்கள் மனைவி சமைத்த சாப்பாடானது சரியில்லை என்றாலும்., அவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அன்பாக உணவின் சுவை குறித்து கூற வேண்டும்.

உங்களின் மனைவியுடன் வெளியில் செல்லும் சமயத்தில் பலருக்கு முன்னர் அவரை திட்ட கூடாது.

எந்தவிதமான சூழ்நிலை வந்தாலும்., மனைவியை விட்டுக்கொடுத்து பேச கூடாது.

பிற இல்லங்களில் நடைபெறும் சுப விழாக்களுக்கு இருவரும் சேர்ந்து சென்று வர வேண்டும்.

எந்த விதமான பிரச்சனையாக இருந்தாலும் துணையுடன் பேசி கலந்தாலோசிக்க வேண்டும்.

எந்த பிரச்சனைக்கு என்ன தீர்வென்பதை சொல்லும் போது., அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை பொறுமையாக கேட்க வேண்டும்.

மனைவியின் கருத்து வாழ்க்கை மற்றும் நடைமுறைக்கு சரியாக இருப்பின் அவரது கருத்தை ஆதரித்து., அந்த கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

உங்களின் மனைவி உங்களுக்காக சமையல் மற்றும் பிற விஷயத்தில் வித்தியாசமான முறையில் புதுமையை புகுத்தினால் அதனை ரசித்து பாராட்ட வேண்டும்.

கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறை இருவரும் சேர்ந்து மனது விட்டு பேசி வர வேண்டும்.

உங்களின் மனைவியை மாதங்களுக்கு ஒரு முறை வெளியே அழைத்து சென்று வர வேண்டும்.

உங்களின் மனைவியை வருடத்திற்கு ஒரு முறை வெளியூருக்கு இன்ப சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும்.

பிள்ளைகளின் நலன்., எதிர்கால வாழ்க்கை மற்றும் படிப்பு குறித்து கேட்டறிந்து செயல்படுத்த வேண்டும்.

கணவன் – மனைவி இல்லறத்தில் ஒளிவு மறைவு என்பது துளியும் இருக்க கூடாது., கல்லானாலும் கணவன் – புல்லானாலும் புருஷன் என்று நினைக்க வைக்க வேண்டும்.