இல்லங்களில் இருக்கும் சமயங்களில் பலர் உறங்கும் சமயத்தில் தலைக்கு ஒரு தலையணை., காலுக்கு ஒரு தலையணை., நடுவில் படுத்துக்கொண்டு உடலின் இரு புறங்களிலும் இரண்டு தலையணை வீதம் மொத்தமாக 8 தலையணையை வைத்து தூங்கும் நபர்களும்., ஒரே ஒரு தலையணனையை வைத்து கொண்டு தூங்கும் நபர்களும் உண்டு. தலையனையை இல்லாமல் தூங்கும் நபர்களும் உண்டு.
தலையணை இல்லாமல் தூங்குவதே நல்லது என்பதை வேலைக்கு வெளியூர்களுக்கு வந்து., தலையணை இல்லாமல் தூங்கும் சமயத்திலேயே பலர் அதனை உணர்கின்றனர். இதன் மூலமாக உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது.
உறங்கும் சமயத்தில் தலையணையை பயன்படுத்தாமல் தூங்குவதால் தண்டுவடம் இயற்கையான சூழ்நிலையில் இருக்கும். இதன் மூலமாக தண்டுவட பிரச்சனை., உடல் வலி போன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்க இயலும். தடிமனான தலையணைகளை உபயோகம் செய்யும் பட்சத்தில் தண்டுவட பிரச்சனைகள் ஏற்படலாம்.
தலையணையை தவிர்த்து உறங்குவதால் கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலியில் இருந்து தப்பிக்க இயலும். உடலில் உள்ள எலும்புகளின் நிலைகளை சீர்படுத்தி திடப்படுத்த இயலும். மருத்துவ நிலையின் காரணமாக தலையணையை பயன்படுத்தும் நபர்கள் கட்டாயம் தலையணையை உபயோகம் செய்யவும்.
தலையணையை பயன்படுத்தாமல் உறங்கும் சமயத்தில் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் கட்டுப்படுத்தப்படும். மேலும்., நேராக படுத்து உறங்கும் நபர்களுக்கு மெல்லிய தலையணையும்., ஒரு பக்கமாக படுத்துறங்கும் நபர்களுக்கு மெல்லிய தலையணையும்., குப்புறப்படுத்துறங்கும் நபர்களுக்கு தட்டையான தலையணை உபயோகம் செய்யலாம்.