நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா கவர்னர் ஜென்ரல் மகளிர் XI அணிக்கும், நியூசிலாந்து மகளிர் அணிக்கும் இடையே பயிற்சி போட்டியில் நடைபெற்றது. அந்த போட்டியில் ஆட்டத்தின் 45 ஆவது ஓவரில் ஆஸ்திரேலியாவின் ஹீதர் கிரகாம் வீசிய பந்தினை நியூசிலாந்து அணியின் காதி பெர்கின்ஸ் சந்தித்தார்.
அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் பெர்கின்ஸ் அடித்த பந்து எதிர்முனையில் நின்ற காதி மார்ட்டின் பேட்டில் நேரடியாக பட்டு உயரே எழும்பியது. அதனை பந்துவீச்சாளர் கிரகாம் பிடித்ததில் பெர்கின்ஸ் துரதிருஷ்டவசமாக அவுட்டானார்.
Oh WOW! Katey Martin helps Heather Graham pick up one of the most bizarre dismissals you’ll ever see in the Governor General’s XI match! ? pic.twitter.com/fSV3GJkjyA
— Australian Women’s Cricket Team ? (@SouthernStars) 28 February 2019
காட் அன்ட் போல்டு என்ற முறையில் நியூசிலாந்து மகளிர் அணியின் காதி பெர்கின்ஸ் வித்தியாசமான முறையில் அவுட் ஆன வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.