பாச போராட்டம் நடத்திய காதலன்.! கண்கலங்கி போன காவல் துறையினர்!

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் இருக்கும் பூங்காவில் செஸ்னி என்னும் 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் பூங்காவிற்கு வருகை தந்த மர்ம நபர்கள்., அவர்களுக்கு அருகில் வந்து திடீரென அவர்கள் வைத்திருந்த கத்தியின் மூலமாக மனைவியின் முகம் மற்றும் கழுத்தில் குத்திவிட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பியோடினர்.

கத்தி முகத்திலேயே குத்தி நின்றபடி உயிருக்கு போராடி துடித்த நிலையில்., இருந்த அவரை கண்ட காதலன் அதிச்சியடைந்து செய்வதறியாது திகைத்துப்போனார். சிறிது நொடியில் சுதாரித்துக்கொண்ட அவர்., விஷயம் குறித்து காவல் துறையினருக்கும்., அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்தார்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அந்த இடத்தில் மாணவியை கட்டியணைத்து காதலன் கதறி அழுததை கண்டு காவல் துறையினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபக உயிரிழந்துள்ளார். மேலும்., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் கத்தியை முகத்தில் இருந்து எடுப்பதற்கு முயற்சித்தும் அந்த முயற்சி பலனில்லாமல் போயுள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.