அரை நிர்வாணமாக தெருவில் ஓடிய கர்ப்பிணி பெண்!

மதுரையை அடுத்த நரசிங்கம் பாதிரியார் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், இவரது மனைவி முத்து பாண்டியம்மாள். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் விஜயகுமார் மதுவிற்கு அடிமையாய் இருந்துள்ளார். இவர் தினமும் மது அருந்திவிட்டு அவருடைய மனைவி முத்து பாண்டி அம்மாளை கடுமையாக தாக்கி வந்துள்ளார்.

இவர்களுக்குள் ஏற்படும் தினசரி சண்டையால், மனஉளைச்சலில் பாண்டியம்மாள் படுத்த படுக்கையாக கிடந்துள்ளார். இவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனை பார்த்த விஜயகுமார் தன்னுடைய மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது என நினைத்து, அதனை சரிசெய்ய செல்வம் என்கிற மந்திரவாதியை சந்திக்க சென்றனர்.

மந்திரவாதியிடம் மனைவியையும், குழந்தையையும் பூஜைக்காக அமர வைத்துவிட்டு இவர்கள் வெளியில் காத்திருந்தனர். உள்ளே சாமி ஆடுவதாக கூறிய மந்திரவாதி செல்வம் சவுக்கை எடுத்துக்கொண்டு, நீண்டநேரமாக பாண்டியம்மாளை தாக்க ஆரம்பித்துள்ளான். மேலும், பாண்டியம்மாளின் சேலையையும் உருவி அடிக்க ஆரம்பித்துள்ளார்.

ஒருகட்டத்தில், வலி தாங்க முடியமால் அரை நிர்வாண நிலையில் தனது கைக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு ஓடி காவல் நிலையத்திற்கு ஓடியுள்ளார் பாண்டியம்மாள். மேலும், அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மந்திரவாதி செல்வம், கணவர் விஜயகுமார் மேலும் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.