இன்று மஹா சிவராத்திரி ஆகும். மற்ற நாட்களை விட இன்று கோலாகலமாக சிவனை மக்கள் வழிபடுவார்கள். இன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை கோடிக்கணக்கான பக்தர்கள் பிரதிஷ்ட்டை செய்வார்கள். சிலர் தவறான முறையில் சிவபெருமானை வழிபடுவார்கள். இது சிவபெருமானை கோபம் கொள்ள செய்யும் என புராணங்கள் கூறுகின்றன.
நாம் சிவனுக்கு படையலாக வழங்கும் உணவு முதல் விரத காலங்களில் நாம் சாப்பிடும் உணவு வரை எல்லாவற்றிலும் மிக கவனம் செலுத்த வேண்டும். சில உணவுகள் சிவபெருமானுக்கு பிடித்ததாக இருக்கும். ஆனால், ஒரு சில உணவு வகைகளை சிவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது என பல்வேறு குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த பதிவில் மஹா சிவராத்திரி அன்று எந்தெந்த உணவுகளை சிவனுக்கு படையலிட வேண்டும், எந்தெந்த உணவுகளை படையல் இடக்கூடாது முதலிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்வோம்.
மஹா சிவராத்திரி!
உலக அளவில் இந்த நாளை இந்துக்கள் மிகவும் பக்தியுடன் கொண்டாடி வருகின்றனர். சிவன் மீதுள்ள பக்தியும், அவர் மீதுள்ள நம்பிக்கையும் ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
மஹா சிவராத்திரிக்கு அன்று சிவனுக்கு படைக்கப்படும் உணவுகளில் நாம் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். இன்றைய நாளில் படைக்கப்படும் உணவுகள் சிவனின் கோபத்தை தூண்டாத வகையில் இருப்பது அவசியம்.
எப்போது?
இந்த வருடம் மார்ச் 4ம் தேதியான இன்று மஹா சிவராத்திரி விசேஷமாக கொண்டாட உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் இரு தினங்களுக்கு முன்பே பல இடங்களில் தொடங்கி இருக்கும். முறையாக விரதம் இருந்து, சிவனுக்கு சிறப்பான உணவுகளை படையலிட்டு வழிபட்டு வந்தாலே சிவனின் பரிபூரண அருள் கிடைத்து விடும்.
விரதம்
மஹா சிவராத்திரியான இன்று விரதம் இருக்கும் போது கட்டாயம் அசைவ உணவுகளை சாப்பிட்டு விட கூடாது. மேலும், சமைக்கும் பாத்திரங்களும் மிக சுத்தமான சைவ பாத்திரமாக தேர்ந்தெடுக்க வேண்டும். விரதம் முழுக்க ஒரு சொட்டு நீர் குடிக்க கூடாது என்பது அன்றைய கால கட்டத்தில் பின்பற்றப்பட்டது.
உணவு
ஆனால், இன்றைய கால கட்டத்தில் அவ்வப்போது வேண்டுமென்றால் நீர் அருந்தி கொள்ளலாம். மேலும், சிலர் விரதம் இருக்கும் போது பால், டீ, காபி போன்றவற்றை தற்போதெல்லாம் அருந்துவதுண்டு. சிலர் தேவைக்கு பழங்களை கூட உண்பார்கள். என்ன இருந்தாலும் இவ்வாறு செய்வது முழுமையான விரதம் ஆகாது.
துளசி
சிவபுராணத்தின் படி துளசியை சிவனுக்கு எக்காரணத்தை கொண்டும் படைக்க கூடாது. காரணம் ஜலந்தர் என்கிற அசுரனால் இந்த துளசி சிவனுக்கு ஆகாத மரமாக உள்ளது என்று புராணங்களில் கருதப்படுகின்றன. ஆதலால், சிவனுக்கு இதனை தவிர்ப்பது நல்லது.
தேங்காய் தண்ணீர்
சிவனுக்கு தேங்காய் வைத்து படைக்கலாம். ஆனால், தேங்காய் நீர் வைத்து சிவனுக்கு படைக்க கூடாது என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. காரணம் சிவனுக்கு தேங்காய் நீரை படையலாக வழங்கி விட்டு நாம் அதனை குடிப்பதால் தான். ஆதலால் இதை தவிர்க்க வேண்டும்.
குங்குமம்
‘அழிக்கும் கடவுள்” என புராணங்களில் குறிப்பிடுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு குங்குமத்தை படையலாக பெண்கள் வைத்து வழிபடும் போது, அது அவரை மேலும் ஆக்ரோஷம் செய்து விடும் என்பதற்காக இதை சிவனுக்கு படையலாக வைக்க கூடாது.
மஞ்சள்
மஹா சிவராத்திரியின் போது சிவானுக்கு மஞ்சளை வைத்து படைக்க கூடாது. இது பெண்களின் அழகிற்காக பயன்படுத்தப்படுவதால் சிவனுக்கு படையலாக வைக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவபக்தர்கள்
சிவனுக்கு மஹா சிவராத்திரியின் போது படைத்து விட்டு காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம். மேலும், சாதாரண உப்பிற்கு பதிலாக ராக்சால்ட்டை பயன்படுத்துவது சிறந்தது. உருளைக்கிழங்கை வெங்காயம், பூண்டு, மசாலாக்கள் சேர்க்காமல் சமைத்து சாப்பிடலாம்.