அதிகாலையில் நுழைந்த பாகிஸ்தான் இராணுவத்தை தெறிக்க விட்ட இந்திய ராணுவம்..!

நாங்கள் சமாதானமாகிவிட்டோம் என்று கூறி இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு, தினம் தினம் அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது பாகிஸ்தான் இராணுவம்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த மாதம் 14ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.

இதனையடுத்து பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை , பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பின் மீது தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எல்லைப்பகுதிகளில் உள்ள இந்திய நிலைகளையும், குடியிருப்புகளையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக காஷ்மீரின் எல்லையோரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலம் அக்னூர் செக்டார் பகுதியில் அதிகாலை 3 மணிக்கு பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

இதனால் விடிவதற்குள் பதற்றமான சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.