கடலூர் மாவட்டத்தில் இருக்கும் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள வாழப்பட்டு கிராமத்தை சார்ந்தவர் கங்கா (27). இந்த கிராமத்திற்கு அருகில் இருக்கும் ஊர் சொர்ணாவூர்., இந்த கிராமத்தை சார்ந்தவர் ராஜசேகர் (வயது 31). இவர்கள் இருவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக காதலித்து வந்த நிலையில்., திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ராஜசேகரின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூருக்கு சென்று பணியாற்றி வருவது வழக்கம். அந்த சமயத்தில் கங்காவிற்கு சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை அறிந்த ராஜசேகர் தனது மனைவியை கண்டிக்கவே., இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தொடர்ந்து குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததன் காரணமாக இருவரும் நீதிமன்றத்தில் விவகாரத்திற்கு மனுதாக்கல் செய்து., பின்னர் விசாரணைக்கு இருவரும் ஒத்துழைக்காமல் இருந்த காரணத்தால்., நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து இவர்கள் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். அதன் படி., கங்கா தனது குழந்தைகளுடன் மடுக்கரையில் இருக்கும் கிராமத்தில் குடியேறினர்.
தனது மனைவியை பிரிந்த ராஜசேகர் மீண்டும் கங்காவிடம் சென்று சேர்ந்து வாழ கூறி பேசி வந்துள்ளார். இந்த சமயத்தில் கங்கா கடந்த 1 ம் தேதியன்று பால் வாங்கிவிட்டு வரும் சமயத்தில்., கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
கங்காவின் கணவரான ராஜசேகரிடம் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மேலும்., முதற்கட்டமாக நடைபெற்ற விசாரணையில்., ராஜசேகர் எனக்கு ஒன்றும் தெரியாது., சம்பவத்தன்று வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது சந்தேகம் கொண்ட காவல் துறையினர் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., கங்காவை தனது நண்பர்கள் மூலமாக கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். மேலும்., இது குறித்து அவர் தெரிவித்ததாவது., மனைவியின் நடத்தை காரணமாக மனரீதியில் துவண்ட என்னை., நண்பர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொலை செய்ய சொல்லி கூறினார். இதன் மூலமாக கங்காவை தனது நண்பர்கள் மூலமாக கொலை செய்து., ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியது தெரியவந்தது.
இதனையடுத்து ராஜசேகரின் நண்பர்களாக சுகுமாரன் (வயது 34)., அருள்பிரகாசம் (வயது 26)., ஜெகன் (வயது 27)., பிரபா (வயது 27)., அய்யப்பன் (வயது 27)., குணசீலன் (வயது 24),, தசரதன் என்கிற தசா (வயது 27)., ரஞ்சித் (வயது 26) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும்., இந்த சம்பவத்தில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாங்கல் அனைத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.