ஐதராபாத்தில் திருமணம் முடிந்த 6 மாதங்களில் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மாநிலத்தில் சேர்ந்த நிவேதா என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக மென்பொருள் நிறுவன ஊழியர் ரகு பிரசாத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக தெரிகிறது.
சனிக்கிழமை இரவு மீண்டும் தம்பதியினருக்குள் குடும்ப விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த நிவேதா இரவு முழுவதும் சோகத்துடனே காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் உச்சியிலிருந்து நிவேதா குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் ரகுபிரசாத்தின் பெற்றோர் கொடுமைபடுத்தியதால் தான் எங்களுடைய மகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என நிவேதாவின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.