இங்கிலாந்து நாட்டை சார்ந்தவர் அலெக்ஸாண்ட்ரா விக்னன் (வயது 25). சம்பவத்தன்று சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் அந்த சாலையில் எதிர்புறமாக வந்த நபர்கள்., அவரை நீளமான பிளேடு மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர்.
மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியதில் அவருடைய கன்னம்., கழுத்து., தோள்கள்., மார்பு பகுதிகள் மற்றும் முதுகெலும்பு பகுதியில் கத்திகள் பாய்ந்து இரத்த வெள்ளத்தில் உயிருக்கு துடிதுடித்து கொண்டு இருந்தார்.
இதனை கண்ட அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும்., அவசர ஊர்திக்கும் தகவலை தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மருத்துவமனையில் மருத்துவர்கள் சுமார் 4 மணிநேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் அவரது உடலில் இருந்த பிளேடை அகற்றி., அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.
மர்ம நபர்கள் அவரது கழுதை தாக்கும் போது., அவர் அணிந்திருந்த 5 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.500) மதிப்புள்ள ஆடையானது அவரது உயிரை காப்பாற்றியதாகவும்., கழுத்தில் இருந்த ஆடை இல்லையென்றால் இறந்திருப்பேன் என்று தெரிவித்தார்.