பொதுவாகவே தமிழ் சினிமாக்களை விட, சின்னத்திரை தொடர்புகளுக்கே ரசிகர்கள் அதிகம். மேலும் ரசிகர்கள் தொடர்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரையும் தங்களது வீட்டில் ஒருவராகவே எண்ணிக் கொள்வர். அதுமட்டுமின்றி சீரியலில் வரும் காட்சிகளை நடிப்பு என எண்ணாமல் அதனுள் மூழ்கி உண்மையாகவே நடப்பது போன்ற மனநிலையில் பார்ப்பவர்களும் பலர்.
அவ்வாறு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாயகி தொடர். இதில் திலீப் ராயன், வித்யா பிரதீப், அம்பிகா, மீரா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
குடும்ப கதையை மையமாகக் கொண்ட இவற்றில் வித்யா பிரதீப் ஆனந்தி என்ற வேடத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், மக்கள் அனைவரும் நாயகி சீரியலில் வரும் காட்சிகளை எங்களது பொதுவாழ்வில் நடப்பதாகவே எண்ணுகின்றனர். அதனால் ரசிகர்கள் என்னை எங்கு கண்டாலும் சீரியல் குறித்தே கேள்வியெழுப்புவர். மேலும் தொடரில் திருமணம் ஆவதற்கு முன்பு எப்பொழுது திருமணம் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.
அதனை தொடர்ந்து திருமணம் முடிந்து விட்ட நிலையில் என்னிடம் எப்போது சாந்தி முகூர்த்தம் என்று கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர் அதுவும் பொது நிகழ்ச்சிகளில் மக்கள்கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் ரசிகர்கள் இவ்வாறு கேட்கும் போது எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் மிகவும் கூச்சமாக இருக்கும் என வெட்கப்பட்டுக்கொண்டே நாயகி நடிகை வித்யா பிரதீப் கூறியுள்ளார்.