சற்று முன்னர் மன்னார் நீதவான் வழங்கிய அதிரடி ஆணை!

உடைக்கப்பட்ட திருக்கேதீச்வர ஆலய வீதி வளைவை, இன்றைய சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு உடனடியாக, மீண்டும் நான்கு நாட்களுக்கு பொருத்தி வைக்கும்படி, மன்னார் நீதவான் சற்று முன் ஆணை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

இன்றைய தினம் விடுமுறையாக இருந்ததால், நடைபெற்ற அசம்பாவித்த்தின் அவசரம் கருதி இவ்வழக்கை நீதவானின் இல்லத்திற்கு கொண்டு செல்லும்படி, மன்னார் பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு இன்று காலை அறிவுறுத்தி இருந்தேன். அதன்படி வழக்கு நீதவானிடம் கொண்டு செல்லப்பட்ட வேளையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் பதிவிட்டுள்ளார்.