முடி உதிர்வா?., முடி வளரவில்லையா?.!! ஒரே ஒரு தீர்வு!

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இருவரும் பெரும்பாலும் கூறும் பிரச்சனை முடி உதிர்கிறது என்பதுதான். இந்த பிரச்சனை இருபாலருக்கும் பொதுவாக இருக்கிறது.

சிறு வயதில் இருந்தே முடி கொட்டுவது., பணி சூழல் காரணமாக அடிக்கடி ஊர் மாற்றி செல்லும் போது., அந்த ஊரின் நீர் சேராமல் முடி கொட்டுவது (சென்னையில் இருப்பவர் பெரும்பாலானோர் கூறுவது) போன்று கூறி கொண்டு இருப்பார்கள்.

இதனை தடுப்பதற்கு சின்ன வெங்காயத்தை உபயோகம் செய்யலாம். சின்ன வெங்காயத்தில் இருக்கும் சல்பர் என்ற வேதிபொருளின் காரணமாக முடி உதிர்வானது குறைக்கப்பட்டு., முடியின் வளர்ச்சியானது அதிகரிக்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் சாற்றை தலையில் தேய்த்து சுமார் 5 நிமிடம் மசாஜ் செய்தால்., நமது உடைந்த இரத்த ஓட்டமானது அதிகரிக்கிறது.

முடி வளரவில்லை என்று கூறி கடைகளில் இருக்கும் பல்வேறு எண்ணெய்களை வாங்கி தேய்ப்பதற்கு., இயற்கையாக வெங்காயத்தை உபயோகம் செய்யலாம். மேலும்., கடைகளில் இருக்கும் எண்ணெய்களில் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த முறையில் எந்த விதமான பாதிப்பும்., பக்க விளைவும் ஏற்படாது.

சின்ன வெங்காயத்தை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து., அதில் இருக்கும் சாற்றை பிழிந்து வடிகட்டி உபயோகம் செய்ய வேண்டும். அந்த சாற்றை தலையில் தேய்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்து., பின்னர் ஷாம்பு போட்டு குளித்து வர வேண்டும்.

இந்த முறையின் மூலமாக சுமார் ஒரு மாதத்திலேயே முடி உதிர்வானது முடிவிற்கு வந்துவிடும். வெங்காயத்தின் சாறுடன் தேங்காய் எண்ணையையும் சேர்த்து தலையில் தடவலாம். முடி அதிகளவு உதிர்ந்து வந்தால் இந்த பிரச்சனையானது விரைவில் சரி செய்யப்பட்டு., முடியும் வளரும்.