உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சிலர் திருமணத்தை முடித்துவிட்டு பின்னர் மனைவியை கைவிட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த விஷயம் குறித்து அதிகளவில் புகார்கள் எழுந்த நிலையில்., இது குறித்து மத்திய பெண்கள் நல அமைச்சகத்தின் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் சுமார் 45 நபர்கள் அவர்களின் மனைவியை கைவிட்டு பிற நாடுகளில் வசித்து வருவது தெரியவந்தது.
இந்த விஷயம் குறித்து மேனகா தெரிவித்தாவது., வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் திருமணம் முடிந்த பின்னர் தனது மனைவியை கைவிட்டு வாழ்ந்து வருகின்றனர். அது போன்று மனைவியை கைவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மசோதாவானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவானது அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற விசாரணையில்., சுமார் 45 பேர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது கண்டறியப்பட்டுளள்து. இவர்களின் கடவுசீட்டு (பாஸ்போர்ட்) முடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த மசோதா வெளியுறவுத்துறை அமைச்சகம்., மத்திய குழந்தைகள் நல அமைச்சகம் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகம்., மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்., மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூட்டு முயற்சிக்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்டது