பெண்களின் வயதானது 15 வயதை தாண்டும் சமயத்தில்., அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் பருவமடைந்த பயம்., எதிர்காலத்தின் படிப்பு., வாழ்க்கை மற்றும் பல சிந்தனைகளின் காரணமாக படபடப்பு மற்றும் மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் வரலாம். இதனை எளிதில் குணப்படுத்திவிடலாம். இந்த பிரச்சனைகள் உள்ள 10 விழுக்காடு நபர்களுக்கு இதயத்தில் “மைடிரல் வால்வு” உண்டாகி பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
அந்த வகையில்., 25 வயது முதல் 45 வயது வரை இருக்கும் பெண்கள் பெரும்பாலானோர் திருமணம் முடிந்து தனது கணவரின் இல்லத்திற்கு சென்று இருப்பார்கள். அவர்களின் குடும்ப சூழ்நிலையை மாற்றியதன் விளைவாக வரும் பயம்., வெறுப்பு மற்றும் படபடப்பு காரணமாக இரத்த அழுத்தமானது ஏற்படும். மேலும்., பணிகளுக்கு சென்று வரும் பெண்கள் பெரும்பாலும் குழந்தைகளை பெற்றெடுத்தவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.
இதுமட்டுமல்லாது குழந்தைகளை வளர்க்கும் சமயத்தில் ஏற்படும் பிரச்சனைகள்., அலுவலகத்தில் இருக்கும் பிரச்சனைகள்., குடும்பத்தை பராமரிப்பதில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்., அதனால் ஏற்படும் மனஉளைச்சல் மற்றும் படபடப்பு., குடும்பத்தின் பாரம்பரிய வியாதி போன்ற பிரச்சனையால் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதற்கு அடுத்தபடியாக 45 வயது முதல் 65 வயது வரை இருக்கும் பெண்கள் அவர்களின் குடும்ப சுமை., பிள்ளைகளின் எதிர்காலத்தின் தேவை மற்றும் பொருளாதார தடுமாற்றம் போன்ற பிரச்சனையால் வரும் இரத்த அழுத்தம்., சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளால் மார்பு வலி மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும்., 65 வயது முதல் 85 வயது வரை இருக்கும் பெண்களுக்கு சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோய்., அதிக கொழுப்பு போன்ற பிரச்சனையால் மெட்டபாலிக் சிண்ட்ரோம் நோய்கள் வர வாய்ப்புள்ளது.