அதிர வைத்த பெண்ணின் வாக்குமூலம்!

தமிழகத்தின் கள்ளநோட்டு அடித்து புழக்கத்தில் விட முயன்ற முதுகலை பட்டதாரி பெண் பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூரை சேர்ந்த தமிழரசி மற்றும் குமுதா ஆகிய இருவரும் அங்குள்ள பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பகல், பெண்ணொருவர் குமுதா கடைக்கு வந்த நிலையில் அவரிடம் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து சில்லறை கேட்ட போது தன்னிடம் சில்லறை இல்லை என குமுதா கூறினார்.

பின்னர் அருகிலிருந்த தமிழரசியிடம் அப்பெண் சில்லறை கேட்ட நிலையில் அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த தமிழரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து அருகிலிருந்த பொலிசாருக்கு தமிழரசி தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு பொலிசார் வருவதற்குள் அப்பெண் மாயமானார்.

பின்னர் அங்கிருந்த பேருந்தில் அவர் உட்கார்ந்திருந்ததை பார்த்த பொலிசார் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது தனது பெயர் பரணிகுமாரி (35) என்றும் தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் யூடியூப் பார்த்து கள்ளநோட்டை அடித்ததாகவும் கூறினார்.

இதையடுத்து பரணிகுமாரியிடம் இருந்து 66 ஆயிரம் மதிப்புள்ள 2000 கள்ள நோட்டுகளை பொலிசார் கைப்பற்றினார்கள்.

இதோடு கள்ளநோட்டு அடிக்க அவர் பயன்படுத்திய ஜெராக்ஸ் மிஷின் பேப்பர், கத்தரிக்கோல் ஆகியவைகளும் பறிமுதல் செய்யப்பட்டது

மேலும், விசாரணையில் பரணிகுமாரி எம்.பி.ஏ முதுகலை பட்டப்படிப்பு படித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.