குள்ள மனிதர்கள் நடமாட்டம்! பெண்ணொருவருக்கு நடந்துள்ள விபரீதம்…

அநுராதபுரம் – மஹவிலச்சிய மற்றும் தந்திரிமலை பகுதியில் இரண்டு அடி உயரமான மர்மமான குள்ள மனிதர்களது நடமாட்டங்கள் காணப்படுவதாக நேரில் கண்ட அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த குள்ள மனிதர்கள் நேற்றிரவு நடமாடியுள்ளதாகவும், இதன்போது பெண்ணொருவருடைய கையை கீறி காயப்படுத்தி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தந்திரிமலை, மஹசியபலாகஸ்வெவ பகுதியில் மர்ம மனிதரது நடமாட்டத்தை நேரில் கண்ட சிலர் தந்திரிமலை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தேடுதல் பணிகளில் ஈடுபட்ட போதும் அவ்வாறு எந்த நடமாட்டத்தையும் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் தந்திரிமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு வினவியபோது,

மர்ம உருவத்திலான குள்ள மனிதர்கள் நடமாடுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தேடுதல் நடத்தியும் நாங்கள் எவரையும் காணவில்லை.

மக்கள் கூறும் விடயங்களைப் பார்க்கும் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாமென தந்திரிமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.