மனைவிகளை கைவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய 45 பேர் சிக்கலில்….

திருமணம் செய்து மனைவிகளை இந்தியாவில் விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய 45 பேரின் பாஸ்போர்ட்டுகளை முடக்கியதாக மகளிர் மற்றும் சிறார் நல அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் பணியாற்றும் கணவன்கள் பலர் திருமணத்திற்கு பின்னர் தங்கள் மனைவிகளை கைவிட்டுவிட்டு தப்புவதாக அடிக்கடி புகார் எழுந்து வந்தது.

இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் விசாரிக்க அமைப்பு ஒன்றை உருவாக்க மகளிர் மற்றும் சிறார் நல அமைச்சகம் உத்தரவிட்டது.

குறித்த அமைப்பானது இந்தியாவில் மனைவிகளை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிய கணவன்கள் தொடர்பில் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதில் 45 பேர் சிக்கியதாகவும், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை இந்திய அரசு கண்காணித்து முடக்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.