கொழும்பை அண்மித்த பகுதியொன்றில் சொத்தினை பெற்றுக்கொள்வதற்காக தாயை கொலை செய்ய மகள் முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மோட்டார் சைக்கிளில் மோதி தாயை கொலை செய்ய அவர் முயற்சித்துள்ளார்.
பாணந்துறையில் வீடு ஒன்றில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் மற்றும் அவரது மூத்த மகளுக்கு இடையில் வாக்குவாதம் தீவிரம் அடைந்துள்ளது. இதன்போது கோபமடைந்த மகள் மோட்டார் சைக்கிளை இயக்கி 57 வயதான தாயின் மீது ஏற்றியுள்ளார். விபத்தினால் படுகாயமடைந்த தாயார் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்ட தூரம் சென்றமையினால் மகள் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
36 வயதான மகள் பாணந்துறை பிரதேசத்தின் பிரபல சட்டத்தரணியிடம் பணியாற்றி வருகின்றார்.
“நீ உயிரிழக்கும் வரை மாத்திரமே இந்த வீட்டில் தங்கியிருக்கலாம் என்பதனை நினைவில் வைத்து கொள்ளுங்கள்” என கூறி விட்டு மகள் திடீரென தாய் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றியுள்ளார். பின்னர் தாயினை தலை பிடித்து அடித்துள்ளார் என காயமடைந்த தாயார் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.