12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தவருடம் இங்கிலாந்தில் மே 30–ந்தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடக்கிறது. இதனையடுத்து அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை தேர்வு செய்வதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இந்திய அணியை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் பல வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னுரிமை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லட்சுமணன், வரும் உலகக் கோப்பைக்கான இந்தியாவிற்காக ஆடும் வீரர்களை உத்தேசமாக அறிவித்துள்ளார். இதில் பலராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவதே சிறந்தது என லட்சுமணன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இந்திய அணியில் சிறந்த மட்டையாளராக தன்னை நிரூபித்துவரும் கேஎல் ராகுல் மற்றும் பந்துவீச்சாளர் கலீல் அகமத் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லட்சுமணன் கூறும் இந்திய உத்தேச அணி:
ரோகித் சர்மா, தவான், விராட் கோலி, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா, சாகல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சாமி, பும்ரா, கேஎல் ராகுல், கலீல் அஹ்மத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.