பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு….

உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களை தடைவிதிக்க வேண்டும் என ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில் சார்பில் பாகிஸ்தான் நாடுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி வழங்கி ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதையடுத்து, இயக்கங்களுக்குரிய சொத்துகளை பறிமுதல் செய்யவும் இவற்றுக்கு வரக்கூடிய நிதியாதாரத்தை பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கி ஆணை பிறப்பித்துள்ள பாகிஸ்தான் அரசு.

ஆனால், பாகிஸ்தானின் இந்த முடிவு வெறும் கண்துடைப்பு நாடகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.