பானிபூரி வாங்கி தராததால் நேர்ந்த விபரீதம்!

குஜராத் மாநிலத்தில் வசித்து வருபவர் கோபால். இவரது மனைவி அஞ்சனா.
அஞ்சனாவிற்கு பானிபூரி என்றால் கொள்ளை பிரியம். இந்நிலையில் சமீபத்தில் அஞ்சனா தனது கணவரிடம் பானி பூரி சாப்பிட வேண்டும் போல் உள்ளது. எனவே என்னை கடைக்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளார்.

ஆனால் கோபால் தற்பொழுது எனக்கு வேலை உள்ளது நாளை அழைத்துச் செல்கிறேன் என்று அஞ்சனாவிடம் கூறியுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பித்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அஞ்சனா கோபாலிடம் கீழ் தளத்திற்கு சென்று தண்ணீர் பிடித்து வருமாறு கூறியுள்ளார்.அதனைத் தொடர்ந்து பிடிப்பதற்காக கீழ் தளத்திற்கு சென்ற கோபால் தண்ணீர் பிடித்து கொண்டு தனது வீடு இருக்கும் மாடிக்கு ஏறி வந்துள்ளார்.

ஆனால் அங்கு வீட்டினுள்ளே அஞ்சனா தனது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோபால் கதறி அழுதுள்ளார்.

பின்னர் இது போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அஞ்சனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது தொடர்பாக கோபாலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பானி பூரி வாங்கித்தர கடைக்கு அழைத்துச் செல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.