பிணந்தின்னி கழுகுகளால் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்.! முக்கிய குற்றவாளி அதிரடி கைது.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியை சார்ந்த சபரிராஜன் மற்றும் அவனது நண்பர்கள் முகநூலின் மூலமாக பெண்களை வசியப்படுத்தி., அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில்., பல திடுக்கிடும் உண்மைகள் வெளியான வண்ணம் உள்ளது.

பொள்ளாச்சியில் இருக்கும் ஜோதி நகரை சார்ந்தவன் சபரிராஜன் என்கிற ரிசிவந்த் (வயது 25)., சூளேஸ்வரன்பட்டியை சார்ந்தவன் சதிஷ் (வயது 28)., பக்கோதிபாளையத்தை சார்ந்தவன் வசந்தகுமார் (வயது 24). இந்த வழக்கில் கைதான முதல் குற்றவாளியான சபரிராஜன் ஜவுளிக்கடையை நடத்தி வருகிறான். மேலும்., அவர் பொறியாளர் ஆவார்.

இவனின் நண்பரான பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சார்ந்த திருநாவுக்கரசு என்பவன் இந்த குழுவிற்கு தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான். வட்டிக்கு பணம் வழங்கி வரும் தொழிலை செய்து வரும் இவன்., கார் வாங்கியும் விற்பனை செய்தும் வந்துள்ளான். இவனிடம் பணியாற்றுபவன் வசந்தகுமார். இவர்கள் அனைவரும் சேர்ந்து கடந்த 2012 ம் வருடத்தின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சுமார் 100 க்கும் மேற்பட்ட இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தும்., ஆபாச காட்சிகளை படமெடுத்தும் மிரட்டி வருகின்றனர்.

அழகான பெண்கள் மற்றும் மாணவிகளின் அலைபேசி எண்ணை திருநாவுக்கரசர் வாங்கி தரவே., அந்த எண்ணில் தொடர்பு கொண்டு சபரிராஜன் மாணவிகளிடம் பேசி ஆசை வார்த்தை கூறி., காதல் வலையில் விழவைப்பார். பின்னர் சம்பவ இடத்திற்கு செல்லும் சபரிராஜன் தனது பெயரை ரிசிவந்த் என்றும் கூறி இது தனது செல்ல பெயர் என்றும் கூறி வந்துள்ளார்.

இவர்களிடம் சிக்கும் பெண்களை அங்குள்ள ஆனைமலை அருகேயுள்ள சினப்பம்பாளையத்திற்கு அருகில் இருக்கும் திருநாவுக்கரசின் பண்ணை இல்லத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்வதும்., இந்த செயலை அவனின் நண்பர்கள் மறைந்திருந்து காட்சிகளாக படம் எடுத்து., பின்னர் அறைக்குள் சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்தும் வந்துள்ளனர்.

இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்., இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசிற்கு பெரிய ஆட்களின் நபர்கள் பின்புலமாக இருந்து செயல்படுத்தாகவும்., திருநாவுக்கரசு ஏற்கனவே வெளியிட்டிருந்த ஆடியோ பதிவில்., நான் கோயம்புத்தூருக்கு வருகிறேன்., காவல் துறையினர் என்னை என்ன செய்கிறார்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று காவல் துறையினரை மிரட்டும் பணியில் வெளியாகியிருந்தது.

இந்த சூழலில் இன்று திருநாவுக்கரசு வெளியிட்ட வீடியோவில்., இந்த பிரச்சனைக்கு எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை., அவதூறாக இந்த பிரச்சனை என் மீது திருப்பப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது போன்ற காட்சிகள் அமையப்பெற்றுள்ளது. இந்த காட்சிப்பதிவுகள் இணையத்தில் உலாவந்து கொண்டு இருக்கும் சூழலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிரட்டல் ஏதும் விடுக்கப்பட்டு வருகிறதா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்., இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான திருநாவுக்கரசு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனிப்படை காவல் துறையினர் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் பல தகவல்கள் கிடைக்கப்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.