ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பான தினகரன், சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கபட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியது.
தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கும் வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து கலந்த வாரம், ஓபிஎஸ் இபிஎஸ் க்கு இரட்டை இலையை வழங்கியது சரி தான் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினகரன், சசிகலா தொடர்ந்த வழக்கு முடிவு வந்தது.
இந்நிலையில், இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருந்தது தேர்தல் ஆணையத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.