இந்தியாவில் சிவ பக்தர்களுக்கென நிறைய கோவில்கள் உள்ளன. அவ்வாறு இருக்கும் கோவில்களில் தவறாமல் நந்தியும் இருக்கும்.
பெரும்பாலும் கோவிலில் நந்தி மூலவரை வணங்குவது போல சிலை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம், திருக்காரிக்கரையில் இருக்கும் நந்தி ஆச்சரியமிக்கதாக இருந்து வருகிறது.
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் ஊத்துக்கோட்டை வழியில் ராமகிரி என்ற கிராமத்தின் அருகே பழமையான கோவில் ஒன்று இருக்கிறது. பழமையான பெரிய சிவாலயமாகும். இத்தலம் கால பைரவ தலம் என்று போற்றப்படுகிறது.
திருக்காரிக்கரையை தற்போது மக்கள் ‘ராமகிரி” என்று அழைக்கின்றனர். நந்தியின் வாயில் இருந்து வருடத்தின் 365 நாட்களும் தண்ணீர் வருகிறது. இது குறித்த விரிவாக பார்க்கலாம்.
வளரும் நந்தி, நிறமாறும் நந்தி என பல கோவில்களில் உள்ள நந்திகளின் மர்மங்கள் நீங்காத நிலையில், தற்போது நந்தியின் வாயில் இருந்து வரும் தண்ணீரும் மர்மாக உள்ளது.
மர்மம் என்ன தெரியுமா? அந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.
இக்கோவிலுக்கு வெளியே ஒரு தீர்த்த குளம் உள்ளது. நந்தி சிலையின் வாயில் இருந்து இந்த நீர் கொட்டுகிறது. நந்தியின் வாயிலிருந்து நீர் அருவியாய் பாய்கிறது.
இந்த நந்தியின் வாயிலிருந்து கொட்டும் நீர் வருடம் முழுவதும் 365 நாட்களிலும் அளவு மாறாமல் அதே அளவு நீர் வெளியேறுகிறது. இதுதான் யாருக்கும் புலப்படாத ஒன்று.
இந்த நீர் மிகவும் சுவை மிகுந்ததாகவும், இனிப்பு தன்மையை ஒத்ததாகவும் இருப்பதாக கூறுகின்றனர்.