பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் அவருக்கென பெண் ரசிகைகள் மிக அதிகம்.
மேலும் பாகுபலி 2 படத்தை தொடர்ந்து தற்போது பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரபாஸை அடையாளம் கண்ட ரசிகை ஒருவர் அவரிடம் சென்று போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரபாஸ் அந்த ரசிகையை தனது பக்கத்தில் அழைத்து, அவள் தோள் மீது கை போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.இதில் உச்சகட்ட உற்சாகம் அடைந்த ரசிகை சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து பிரபாஸின் கன்னத்தில் செல்லமாய் தட்டிவிட்டு ஓடியுள்ளார்.
அதனை தொடர்ந்து பிரபாஸ்தனது கன்னத்தை தடவிக் கொண்டே சிரித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.