பேய் மாமாவாக மாறிய வடிவேலு!

சிலகாலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்த வைகைப்புயல் வடிவேலு, தற்போது ஒரு முழுநீள காமெடி படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். சக்தி சிதம்பரம் இயக்கும் இந்த படத்துக்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தின் வடிவேலு இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த போஸ்டர் பொய்யான ஒன்று என்று தற்போது செய்தி வந்தது. விரைவில் சக்தி சிதம்பரம் வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இருவரும் ஏற்கனவே இணைந்த என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன், வியாபாரி படங்களின் காமெடி பகுதிகள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகின்றன என்பதால் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.