அல்வா கொடுத்ததால்தான் ஜெயலலிதா இறந்தார்!

சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அல்வா கொடுத்து சாகடித்து விட்டதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் சண்முகம்,

காய்ச்சல் காரணமாக ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று கூறினார்கள். ஆனால், மாரடைப்பால் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறுவதாக குற்றம் சாட்டினார்.

சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுத்துதான் இந்த நிலைமைக்கு கொண்டுவந்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.