குடும்ப சண்டையில் குழந்தையை கொன்ற கொடூர தாய்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள தொடுவாய் கீழத்தெருவை சார்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அம்புஜம் (45). இவர்கள் இருவரும் வினோதா (22) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் வினோதாவிற்கும் அதே பகுதியில் இருக்கும் சின்னக்குடியை சார்ந்தவர் ஜெயேந்திரன் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்று, இவர்களுக்கு மூன்று மாதமே ஆன பெண் ஒன்று குழந்தை உள்ளது. இந்த சூழலில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தகாராறு இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த தகராறு அதிகரித்து வந்த நிலையில், ஆத்திரம் அடைந்த வினோதா தனது குழந்தையுடன் தாயாரின் இல்லத்திற்கு வந்துள்ளார்.

மூன்று மாத கைக்குழந்தையுடன் வீட்டிற்கு வந்த மகளிடம் அவரது தாய் அம்புஜம் குடும்பப்பிரச்சனை குறித்து கேட்டுள்ளார். அப்போது வினோதாவிற்கும் அவரது தாயார் அம்புஜத்திற்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், அம்புஜம் தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோதா தனது கையில் இருந்த குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளார். இதில் தரையில் விழுந்து படுகாயமடைந்த குழந்தை துடிதுடித்து பரிதமாக உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.