மகாராஷ்டிரா மாநிலத்தில், பையாஸ் சேக் என்ற நபரும், ஹீனா என்ற பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் கொண்டனர். இவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில், மகனை பராமரிப்பதற்காக பையாஸ் சேக் மாதந்தோறும் ஹீனாவிற்கு ரூ.6 ஆயிரம் அனுப்பி வந்துள்ளார். ஆனால் அந்த தொகை போதவில்லை என்பதற்காக ஹீனா, தனது மகனை கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அவரின் 3 வயது மகனை நிர்வாணப்படுத்தி கரண்டியை வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் அந்த வீடியோவை கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை பார்த்த பையாஸ் சேக் அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பையாஸ் சேக் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஹீனாவை கைது செய்தனர். அவர் மீது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.