இன்றுள்ள பெண்கள் எதிர்பார்க்கும் மணமகன்.!

பொதுவாக பெண்களுக்கு அவர் வீட்டார் வரன்களை தேர்வு செய்யும் சமயத்தில் நல்ல படிப்பு., நல்ல வேலை மற்றும் 5 இலக்கம் முதல் 7 இலக்கம் வரை மாத ஊதியம்., சொந்தமான வீடு மற்றும் வாகனங்கள் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். பெண் வீட்டாரின் நினைப்புகள் எல்லாம் அவரது மகளின் எதிர்காலத்தை கருதி நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்க நினைத்திருப்பார்கள்.

தனது மகளிடம் பெற்றோர் உனக்கு எந்த விதமான மணமகனை பிடிக்கும் என்று பெரும்பாலான இல்லங்களில் கேட்டறிவதே இல்லை., அவர்களிடம் அது இருக்கிறது., இது இருக்கிறது என்று கூறி சம்மதத்தை பெற்றுவிடுவார்கள். இதில் யாரையும் குறை கூற முடியாது., தனது மகளின் வாழ்க்கையை எண்ணி., அவரின் வாழ்க்கை சந்தோசமாக இருக்கவே இவ்வாறு உள்ளனர்.

இன்றுள்ள நவீன காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் பயின்று., பணிக்கு சென்று அவர்களின் தேவையை நிறைவு செய்து வருகின்றனர். இன்றுள்ள சமூகத்தின் நிலை., பொருளாதார நிலை., அரசியல் நிலை மற்றும் பிற சூழ்நிலைகளும் நன்கு அறிந்து கொண்டு., எதிர்காலத்திற்கு நமக்கு எந்த விதமான துணையை தேர்ந்தெடுத்தல் நமது வாழ்க்கை நிம்மதியுடன் இருக்கும் என்று மணமகனின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை பார்த்து தேர்ந்தெடுக்கின்றனர்.

இதற்கு அடுத்தபடியாக அவர்களின் குணத்தை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்., தனக்கு தேவையான அங்கீகாரம் மற்றும் சுதந்திரம் வழங்குபவராக இருக்க வேண்டும் என்று தான். அந்த வகையில்., திருமணத்திற்கு முன்னதாக பெண்கள் முகனூல்., இன்ஸ்டாகிராம் என்று அனைத்து விதமான சமூக வலைத்தளங்களையும் உபயோகம் செய்து வருகின்றனர். இந்த உபயோகம் திருமணத்திற்கு அடுத்தபடியாக காணாமல் போயிருக்கும்.

இது குறித்து அந்த பெண்களிடம் கேட்டால் எனது கணவருக்கு சமூக வலைத்தளங்களை உபயோகம் செய்வது பிடிக்கவில்லை என்ற காரணத்தால் கணக்குளை நீக்கிவிட்டேன் என்ற பதில் வருகிறது. அந்த வகையில்., தனது தோழியின் திருமண நிகழ்வை கணவரின் முகநூலில் பதிவு செய்து., தோழிக்கு டேக் செய்யும் சுதந்திரத்தை அதிகளவில் எதிர்பார்க்கின்றனர்.

பெரும்பாலான இல்லங்களில் இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு அடுத்தபடியாக பணிகளுக்கு செல்வதில் தயக்கம் காட்டுவதில்லை. கணவரின் இல்லத்தில் இருக்கும் நிர்பந்தம் மற்றும் பிரச்சனைகளின் காரணமாக பணிகளுக்கு செல்வதில்லை. மேலும்., தனது நண்பர்கள்., சொந்தங்கள் போன்று தனது உறவை தவறாக பயன்படுத்து குறித்தும் எண்ணுவதும் இல்லை. அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தை வழங்கி மதிப்பளிக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

திருமணம் முடிந்த பின்னர் இருவரும் கணவன் – மனைவி என்ற பந்தத்திற்குள் இல்லாமல் நல்ல நண்பனாகவும்., பெற்றோராகவும் இருக்க வேண்டும். பெண்வீட்டாருடன் கணவனும்., கணவன் வீட்டாருடன் பெண்ணும் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் பழகி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். மேலும்., எந்த நேரத்திலும் வேலை என்று இல்லாமல்., அவர்களுக்கு தேவையான பிற பொழுதுபோக்குகளுக்கும் நேரம் ஒதுக்கி மகிழ்ச்சியுடன் ஒளிவு மறைவில்லாமல் இருக்க வேண்டும்.