இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரு தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி தான் சந்தித்த 120 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் அவர் அடித்த அந்த சதம் அவருக்கு 40 ஆவது ஒருநாள் சதம் ஆகும். மேலும் இந்திய அணி சா்வதேச ஒருநாள் போட்டிகளில் பெற்ற 500வது வெற்றி இதுவாகும்.
போட்டி முடிந்த பின்னா் விராட் கோலி கொடுத்த பேட்டியில், நான் பேட்டிங் செய்ய இறங்கியபோது சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. கடைசிவரை ஆடுகளத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணமே இருந்தது. விஜய் சங்கா் அற்புதமாக விளையாடினாா். மேலும் அவர் வீசிய இறுதி ஓவர் வெற்றிபெறுவதற்கு காரணமாக அமைந்தது என கூறினார்.
நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எனது 40வது சதத்தை பூா்த்தி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதை காட்டிலும் இந்தியா தனது 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது என்பதே எனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக கேப்டன் விராட் கோலி தொிவித்துள்ளாா்.