இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரு தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி தான் சந்தித்த 120 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இது அவருக்கு 40 ஆவது ஒருநாள் சதம் ஆகும்.
இந்தநிலையில் இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
அப்போது பீல்டிங் செய்வதற்காக இந்திய அணி வீரர்கள் மைதானத்துக்குள் நுழைந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் தாண்டி மைதானத்துக்குள் நுழைந்தார்.
அந்த ரசிகர் வேகமாக வீரர்களை நோக்கி வந்த நிலையில், தோனியின் அருகே செல்ல முயன்றார். உடனே இதனைப் பார்த்த தோனி, ரசிகரிடம் சிறிது நேரம் ஓடிப்பிடித்து விளையாடினார்.
பின்னர், ரசிகரின் பாச போராட்டத்தை உணர்ந்த தோனி ஓடுவதை நிறுத்தினார். இதனையடுத்து உடனே தோனியின் காலில் விழுந்த ரசிகர், அவரை கட்டியணைத்துவிட்டு ஓடிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Legend ?????#MSDhoni❤️ #Dhoni??♂️ pic.twitter.com/TbatTJIIH8
— ⓂⒶⒹⒽⒶⓋ ਮਾਧਵ| माधव| (@madhavanand22) 5 March 2019