திருமணமான 10 நாட்களில் மணப்பெண்ணிற்கு அடுத்தடுத்து நேர்ந்த துயர சம்பவங்கள்.!!

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் திருப்பத்தூரை அடுத்துள்ள குனிச்சிமோட்டூர் பகுதியை சார்ந்தவர் பெரியக்கண்ணன். இவரது மனைவியின் பெயர் வள்ளியம்மாள். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இவரது மகளின் மீது அதிகளவு பாசம் கொண்ட பெரியக்கண்ணன்., தனது மகளை படிக்க வைத்து பட்டதாரியாக மாற்றி அழகு பார்த்தார். இவருக்கு திருமண வயது வந்ததும்., கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மாத்தூர் பகுதியை சார்ந்த மாப்பிள்ளையை மனம் முடித்து வைக்க முடிவு செய்துள்ளார்.

அதன் படி இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில்., திருமணம் முடிந்த பத்து நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில்., திருமணம் முடிந்த பத்து நாட்களிலேயே கணவரை இழந்த சுமதி இல்லத்திற்கு திரும்பினார்.

தனது செல்ல மகளின் வாழ்க்கை இவ்வாறு ஆகிவிட்டதே என்று எண்ணி மன வருந்தி காணப்பட்டுள்ளார். இந்த நிலையில்., கடுமையான மன வருத்தத்தில் இருந்து வந்த பெரியக்கண்ணன்., நந்தனம் அருகே உள்ள பகுதியில் இரயில் வரும் சமயத்தில் இரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையா கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் கதறியலேவே., சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.