பராமரிப்பிற்கு தோண்டப்பட்ட கிணறு.! உள்ளே இருந்த பேரதிர்ச்சி…

இலங்கையில் இருக்கும் மட்டக்களம்பு பகுதியில் இருக்கும் சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை பராமரிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது.

அதன்படி கடந்த புதன் கிழமையில் இருந்து கிணற்றை தோண்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்., கிணற்றுக்காக தோண்டும் சமயத்தில் திடீரென்று எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக விஷயத்தை கிணற்றின் உரிமையாளருக்கு தெரிவிக்கவே., உடனடியாக இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஆய்வு செய்து., தடவியல் நிபுணர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.