வகுப்பறையில் உறங்கிய மாணவியை அடித்த மாணவன்.!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் கீரனூரில் இருக்கும் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் திருத்துறைப்பூண்டியை சார்ந்த 21 வயதுடைய மாலாஸ்ரீ என்பவர் அமைப்பியல் துறையில் நான்காம் வருடம் பயின்று வருகிறார்.

இவர் அங்குள்ள மண்டையூரில் இருக்கும் தனியார் விடுதியில் தங்கியிருந்து., கல்லூரிக்கு சென்று பயின்று வந்தார். அந்த சமயத்தில் இவருடன் வகுப்பில் பயிலும்., புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த ராஜகிளி என்பவரின் மகன் முகமது இம்ரான் (வயது 21) என்பவர் பயின்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று கடந்த 25 ம் தேதியன்று கல்லூரிக்கு சென்றிந்த மாலா தலை வலி ஏற்பட்டதன் காரணமாக மேஜையின் மீது தலையை வைத்த படி உறங்கிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் இதனை கண்ட முகமது அவரை திட்டி கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே., இதனை கண்ட சக மாணவர்கள் உடனடியாக இவர்களின் வாக்குவாதத்தை தீர்த்து வைத்தனர். இதனையடுத்து மீண்டும் தனது விடுதியறைக்கு சோகத்துடன் திரும்பியுள்ளார்.

மனமுடைந்த நிலையில் இருந்த மாலா விடுதியறையில் இருந்த எலி மருந்தை உட்கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்., நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.