சென்னை நங்கநல்லூர் எம்.ஜி.ஆர் சாலையில் வசித்து வந்தவர் தனுஷ். 20 வயது நிறைந்த அவர் திருவான்மியூர் அரசு பள்ளி அருகே தள்ளுவண்டியில் திண்பண்டங்கள் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும் நாளடைவில் தனுஷ் அந்த மனைவியை காதலிப்பதாக கூறி அவருடன் பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்தசில தினங்களுக்கு முன்பு தனுஷ் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நங்கநல்லூரில் உள்ள தனது வீட்டிற்குஅழைத்து சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற தனது மகள் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் கள் அவரை தேதி பல இடங்களில் அலைந்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்ததில் மாணவி தனுஷுடன் நெருங்கி பழகியதும், அவருடன் சென்றதும் தெரியவந்தது.
பின்னர்தனுஷை போலீசார் மடக்கி பிடித்த போலீசார் அவரது வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டனர். மேலும் தனுஷ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது தாயார் மற்றும் சித்தப்பா ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.