திடீரென தீவைத்து கொளுத்தி கொண்ட நடிகர் அக்ஷய் குமார்!

‘தி எண்ட்’ (The End) என்ற பெயரில், அமேசானின் ப்ரைம் நிறுவனம் வெப் சீரிஸ் தயாராகியுள்ளது. இந்த வெப் சீரிஸில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துவருகிறார். இதன் வெப் சீரியலைஅறிமுக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அக்ஷ்ய் குமார், மேடையில் இருக்கும் போது திடீரென்று தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். இதனால், விழாவை பார்த்துக்கொன்று இருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நடிகர் அக்ஷய் குமார் கருப்பு கோட் போட்டுக் கொண்டு விழா மேடையில் வந்தார். திடீரென தீ வைத்துக் கொண்டது ரேம்ப் வால்க் என்று பின்பு தான் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பகத்தில் பதிவிட்ட அக்ஷ்ய்குமார், இது வெறும் ஆரம்பம் தான்,முடிவல்ல (The End) என்று ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பதிவு செய்துள்ளார்.

இவர் தமிழில் கடந்த சில மாதங்கள் முன்பு வெளிவந்த ரஜினியின் 2.o படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடத்தி இருப்பர்.