மாயமான பெண் மருத்துவர்! போலீசாரையை கொலை நடுங்க வைத்த பகீர் சம்பவம்.!

ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தி ரெட்டி. 32 வயது நிறைந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன் சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் இரவு வெகு நேரம் ஆகியும் ப்ரீத்தி வீடு திரும்பாததால் அவருடைய தங்கை நித்யா இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து போலீசார் ப்ரீத்தியின் முன்னாள் காதலன் மீது சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பல் மருத்துவரான அவரும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிட்னி வந்துள்ளார். மேலும் மாநாடு முடிந்த பின்னர் அவர் ப்ரீத்தியுடன் ஹோட்டலில் ஒன்றாக அறை எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது.

மேலும் இந்த விசாரணை முடிந்து திரும்பிய சில மணிநேரங்களிலேயே சிட்னி இங்கிலாந்து நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர், விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில் ப்ரீத்தியின் கார் கிங்ஸ்போர்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரின் பின்பகுதியை திறந்து பார்த்தபொழுது உள்ளே ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது. அதனுள் உடலில் பல முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலைசெய்த நிலையில் ப்ரீத்தியின் சடலம் இருந்துள்ளது.

பின்னர் அவருடைய உடலை கைப்பற்றியுள்ள போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.