முக்கிய புள்ளியை தூக்கிய எடப்பாடி-ஓபிஎஸ்.!

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் முதல்- அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்றார்.

முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், தர்மயுத்தம் ஆரம்பித்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் என அதிமுக பிளவுபட்டது. அந்த சமயத்தில் தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த போதிலும், அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

பின்னர் தர்மயுத்தத்தை முடித்துக்கொண்ட ஓபிஎஸ் அணியும், பழனிச்சாமி தலைமையில் ஆன அணியும் ஒன்றாக இணைந்து அதிமுக கட்சியையும், சின்னத்தையும் தங்கள் வசப்படுத்தினர். இருந்த போதிலும் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் சிலர் தினகரன் அணியின் பக்கம் நின்றனர்.

அதில் முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் ஒருவர் ஆவார். இவர், கோவை மாவட்டத்திலுள்ள முக்கிய சட்டமன்ற தொகுதி கிணத்துக்கடவு ஆகும். 2001, 2006, 2011 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் தாமோதரன் வெற்றி பெற்று தமிழக அமைச்சராகவும் இருந்தவர்.

இந்நிலையில், அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் இணைந்துள்ளார்.