தமிழகத்தின் பிரபல அரசியல் கட்சியில் இருந்து வெளியேறிய தொண்டர்கள் – அதிர்ச்சியில் கட்சி மேலிடம்..!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உள்பட ஆயிரம் பேர் திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் பகுதியில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அந்த வட்டாரத்தில் தமாகா கொடிகளை இறக்கிவிட்டு காங்கிரஸ் கொடியைஏற்றினர்.

மங்கலம் பகுதி தமிழ் மாநில காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் தமாகா மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மங்கலம் ஊராட்சித் தலைவருமான வே.முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் வட்டார தமாகா தலைவர் சபா துரை, மங்கலம் பகுதிதலைவர் எம்.நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமலா கண்ணன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சந்தர்ப்பவாதத்துடன் பதவிக்காக தமாகா சில முடிகளை எடுத்துள்ளது. காமராஜரின் உண்மைத் தொண்டர்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமாகாவின் கொடியில்உள்ள காமராஜர், மூப்பனார் ஆகிய தலைவர்கள் காலமெல்லாம் கடைப்பிடித்த கொள்கைக்கு நேர்எதிரானது.

இதனை துரோகமாகக் கருதி பெரும்பாலான தமாகா நிர்வாகிகளும், தொண்டர்களும் தமாகா அமைப்புகளைக் கலைத்துவிட்டு அங்கிருந்து விலகி 1000 பேர் காங்கிரசில் இணைவது’ என்று முடிவெடுத்துள்ளனர்.

மங்கலம், அக்கிராகரப் புத்தூர் ஆகிய ஊர்களில் உள்ளதமாகா அலுவலகத்தில் உள்ளகொடிக் கம்பங்களிலும், சுற்றிலுமுள்ள கிராமங்களிலும் தமாகா கொடி இறக்கப்பட்டு காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது.